Skip to main content

“பிரசாந்த் லண்டனில் பியானோ பயின்ற கலைஞன்”-அந்தாதுன் தமிழ் ரீமேக் குறித்து தியாகராஜன்

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் அந்தாதுன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருது வாங்கியது. இதில் நடித்த ஆயுஷ்மான் குரானா சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வாங்கினார். அடாப்ட ஸ்கீரின்பிளேவுக்கும் இந்த படத்திற்குதான் தேசிய விருது கிடைத்தது. 
 

prashanth

 

 

மூன்று விருதுகளை பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் சித்தார்த் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் எப்படி இருக்கும் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். பின்னர், தனுஷ் இந்த படத்தை வாங்கி, அதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின.
 

இந்நிலையில், டாப்ஸ்டார் பிரசாந்த் இந்த படத்தை வாங்கியுள்ளதாகவும், தமிழில் ரீமேக் எடுக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த அந்தாதுன் தமிழ் ரீமேக் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 
 

அந்தாதுன் படத்தில் ஹீரோ கண்ணு தெரியாதவர் போல நடித்து வெளிநாடு செல்ல நினைக்கும் ஒரு பியானோ கலைஞன். இந்த படத்தில் கண்ணு தெரியாதவராக நடிக்க ஆயுஷ்மான் குரானா மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
 

இந்நிலையில் இந்த படம் குறித்து தியாகராஜன் பேசுகையில், “ அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார். தற்போது படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்