பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் நேற்றுடன் தன்னுடைய ஐம்பது வருட சினிமா பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். கடந்த 1969ஆம் ஆண்டு ‘சாத் இந்துஸ்தானி’ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், படிபடியாக முன்னேறி மக்களை தன் நடிப்பால் ஈர்த்து, இந்தியாவின் உட்ச நட்சத்திரம் என்னும் அந்தஸ்திற்கு வந்தார்.
சமீபத்தில் இவரின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து ரசிகர்களிடம் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.
“எனது உடலில் பல துளைகள் போடப்பட்ட நிலையில் தற்போது சோனோகிராபியும் எடுக்கப்படுகிறது. சில ஊசிகளும் பக்கவாட்டில் குத்தப்பட்டுள்ளன. நரம்புகளில் ஊசிகள் குத்தப்பட்டு மருந்துகளும் ஏற்றப்படுகின்றன. வேலை பளுவை குறைத்து கொள்ளுமாறு சொர்க்கத்தில் இருந்து வந்த ஸ்டெதஸ்கோப் அணிந்த தூதர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்” என்று தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.