Skip to main content

ராமேஸ்வரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீர்கான்...

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம்  ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான  ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டார். 
 

amirkhan

 

 

அடுத்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் லால் சிங் சட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் அமீர்கான். இப்படத்தில் அமீருடன் பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சேதுபதியும் அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

hero


இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு வந்திருந்தார் அமீர்கான். அப்போது அவரை அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் சந்தித்துப் பேசினார்.

அப்போது அங்கு ஷூட்டிங்கை காண சூழ்ந்திருந்த இளைஞர்களை பார்த்து, ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பு வாய்ந்தது. ஆகவே இங்குள்ள இளைஞர்கள் உடல் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தவேண்டும். போதைப் பொருள்களை தவிர்த்து வாழ்க்கையை சிறந்ததாக்குவது அவசியம். வாழ்க்கை.
 

d3


ஒருமுறை என்பதை உணர்ந்து உடல் சுகாதாரத்தை பேணவேண்டும். ஆகவே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை இளைஞர்கள் பயன்படுத்தக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார். இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்