Published on 27/01/2021 | Edited on 27/01/2021
![Samuthirakani](http://image.nakkheeran.in/cdn/farfuture/C3FBoqg8buoj7pP4g6EYePGm8CfLmCXBfxUaenDpb_k/1611728325/sites/default/files/inline-images/151_2.jpg)
'பூவரசம் பீப்பீ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹலீதா ஷமீம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. ஆந்தாலஜி வகைத் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்படத்தைத் தொடர்ந்து, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'ஏலே'. தயாரிப்பாளர் சசிகாந்த் உடனிணைந்து புஷ்கர்-காயத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு கேபர் வாசுகி, அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.