Skip to main content

“நானா படேகர் பயந்துவிட்டார்” - விஷால் பட நடிகை தாக்கு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 actress tanushree dutta says Nana Patekar is scared

பாலிவுட் முன்னணி நடிகரான நானா படேகர், தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது போன்ற விருதுகளை வாங்கிய நானா படேகர் மீது கடந்த 2018ஆம் ஆண்டின் போது, இந்தி நடிகை தன்ஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். 

தமிழில் விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தில் 2008ஆம் ஆண்டு நடித்த போது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக போலீசில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை பொய் என நாடா படேகர் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘அது எல்லாம் பொய் என்று எனக்குத் தெரியும். அதனால், எனக்கு கோபம் வரவில்லை. படப்பிடிப்பில் என்ன நடந்தது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். அப்படி எதுவும் நடக்காதபோது, ​​நான் என்ன சொல்ல வேண்டும்? திடீரென்று யாரோ ஒருவர் நீங்கள் இதைச் செய்தீர்கள், இதைச் செய்தீர்கள் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று பேசினார்.

இதற்கு பதில் தரும் வகையில் தனுஸ்ரீ தத்தா நேற்று கூறும் போது, “இப்போது, ​​​​அவருக்கு பயம் வந்துவிட்டது.  பாலிவுட்டில் அவரது ஆதரவாளர்கள் குறைந்துவிட்டனர். அவரை ஆதரித்தவர்கள் எல்லாம் அவரின் குணம் தெரிந்து அவரை ஓரங்கட்டிவிட்டார்கள். அவரது செயல்கள் எப்படிப்பட்டவை என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான், இப்படியெல்லாம் உளறுகிறார். ஆறு வருடத்திற்கு முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இப்போது பதில் அளித்துள்ளார். நானா படேகர் ஒரு பொய் சொல்லும் நோயுள்ளவர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

விஷச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறுப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு  தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர். 

Next Story

''மூன்றுமுறை கருவுற்றேன்...ஏமாற்றிவிட்டார்'' - முன்னாள் அமைச்சர் மீது ‘நாடோடிகள்’ பட நடிகை புகார்!!  

Published on 28/05/2021 | Edited on 29/05/2021

 

film actress complains about ex-minister


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

'நாடோடிகள்' படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் சென்ற சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தினி, பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2017ஆம் ஆண்டு பணி நிமித்தமாக சென்னை வந்தபோது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

 

பின்னர் நெருங்கி பழகிய முன்னாள் அமைச்சர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேர்ந்து வாழ்ந்துவந்தார். அதன் விளைவாக மூன்றுமுறை தான் கருவுற்ற நிலையில், தம்மை வலுக்கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும், தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

film actress complains about ex-minister

 

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாந்தினி, ''நாங்கள் தனியாக 5 வருஷமாக குடும்ப நடத்த ஆரம்பித்தோம். அவர் எனக்கு கொடுத்த வாக்கு, அவருடைய மனைவியை விவகாரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். ஆனால் இறுதியில் என்னை ஏமாற்றிவிட்டார். மனதளவிலும் உடலளவிலும் ஏமாற்றிவிட்டார். இரண்டு வாரமாக என்னை மிரட்ட ஆரம்பிக்கிறார். ‘நீ இதுபோன்று ஏதாவது புகார் கொடுத்தால் ராமநாதபுரத்தில் இருக்கிற ரவுடிகளுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்து உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்'' என கூறியுள்ளார்.

 

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனியார் சேனலில் விளக்கம் அளித்த முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்தக் கும்பல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், “நான் தவறு செய்யவில்லை. நான் ஏன் பயப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.