Skip to main content

ட்ராக்டர் மூலம் வயலை உழும் நடிகை!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா  வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன. 

  keerthy


இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116 லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 லிருந்து 543 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளாது. கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
 

 nakkheeran app



இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் வயலில், ட்ராக்டரை பயன்படுத்தி உழுது விவசாயம் பார்ப்பது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "விவசாயம் செய்வதற்கு இதுதான் ஏற்ற நேரம்" என்று கூறி கூறியுள்ளார். மேலும் அவர் "யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இந்த இடம் எங்களது வீட்டிற்கு சொந்தமான நிலம். யாரும் நுழையமுடியாத வகையில் வேலி அமைத்து இருக்கிறோம். எனவே அரசின் வழிமுறைகளை பின்பற்றிதான் விவசாயம் செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 
 


மலையாளத்தில் "ஹெலன்" என்ற தலைப்பில் வெளியாகி ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்ய அதன் உரிமையை வாங்கியிருக்கிறார் அருண் பாண்டியன். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹெலன் கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியனும், அவருக்கு அப்பாவாக அருண் பாண்டியனும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்