ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் பார்த்திபன் இருவருக்கும் அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்," இந்த கௌரவத்தை பெற்றதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் துபாயின் ஒரு அங்கமாக தற்போது உணருகிறேன். எனக்கு பிடித்த இடங்களில் துபாய்யும் ஒன்று. கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.