அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ‘பகீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்காலிகமாக 'விஷால் 33' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியாக உள்ளது. இத்தகவலை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
All set to reunite for a Big budget PAN INDIAN film to be written & directed by @Adhikravi & produced by @vinod_offl#V33 #Vishal #Vishal33 @ministudiosllp @RIAZtheboss @V4umedia_ @baraju_SuperHit @UrsVamsiShekar pic.twitter.com/BdbUVoz7Aa
— Vishal (@VishalKOfficial) December 16, 2021