Published on 17/12/2020 | Edited on 17/12/2020
![saravanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/f-b7etpw-IysqR3Qd07Sd8QZvZc3uSuarZgC2fbEwuM/1608183017/sites/default/files/inline-images/52_19.jpg)
தமிழ் சினிமாவில் 1990-களின் காலத்தில் நாயகனாக வலம் வந்த நடிகர் சரவணனுக்கு, மறுபிரவேசத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த படம் 'பருத்தி வீரன்'. இயக்குனர் அமீர் இயக்கத்தில், 2007-ம் ஆண்டு வெளியான இப்படத்தில், சரவணன் ஏற்று நடித்திருந்த 'செவ்வாழை' என்ற கதாபாத்திரம் பரவலாகப் பேசப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சரவணனுக்கு பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சரவணன் போட்டியிட்டார். அதில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெற்றார்.