மார்வெல் திரப்படங்களில் கேப்டன் அமெரிக்காவாக அறியப்பட்டவர் க்றிஸ் எவான்ஸ். கடந்த ஆண்டு வெளியான எண்ட்கேம் படத்திலிருந்து தான் மார்வெல் படங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு 'நைவ்ஸ் அவுட்' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
நேற்றுக்கு முந்தைய தினம் கிற்ஸ் எவான்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களோடு நடத்திய ஒரு நேரலையின்போது அவருடைய செல்போன் கேலரியில் ஒரு ஆபாச புகைப்படம் இருந்துள்ளது. இதைக்கண்டுகொண்ட ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பரப்பினர். சிறிது நேரத்தில் அந்த நேரலை வீடியோவை க்றிஸ் எவான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கினார். ஆனாலும், அதுகுறித்த பதிவுகள் சமூக வலைதளங்கள் முழுவதும் பெரும் விவாதமாக மாறியது.
இந்நிலையில் நேற்று ட்விட்டரில் இதுகாரணமாக ட்ரெண்ட செய்யப்பட்டார். மேலும் பலர் அவரை ட்ரோல் செய்தும், சிலர் ஆதரித்தும் பதிவிட்டதால் உலகளவில் ட்ரெண்டானார்.
இந்நிலையில் 'ஹல்க்' கதாபாத்திரத்தில் நடித்த மார்க் ரஃப்பலோ, க்றிஸ் எவான்ஸுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவெஞ்சர்ஸ் படங்களில் க்றிஸ் எவான்ஸுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், “நண்பா...! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்த சங்கடமும் இன்றி தனது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போது, நீங்கள் சங்கடப்படுவதற்கு இதில் எதுவுமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.