Skip to main content

படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அஜித்தை அழைத்த ஆதி!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

actor aadhi invites ajithkumar his wedding

 

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து. இதனைத் தொடர்ந்து காதலித்து வந்த இருவருக்கும் கடந்த மார்ச்  மாதம் நிச்சயம் நடந்தது. 

 

இந்நிலையில் ஆதி நிக்கி கல்ராணி இருவருக்கும் வரும் 18 ஆம் தேதி திருமணம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஏ.கே 61 படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் அஜித்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் டூ ஒலி - மீண்டும் வித்தியாசம் காட்டும் வெற்றிக் கூட்டணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Aadhi and Arivazhagan Sabdham movie teaser released

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு. 

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.