அண்மையில் 80 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சினிமாக்களில் வருகைபுரிந்த நடிகர், நடிகைகள் சிலர் ஒன்றாக கலந்துகொண்ட ரியூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்லால், சிரஞ்சீவி, அம்பிகா, ராதிகா, பிரபு, சரத் குமார், பாக்யராஜ்மோகன்லால், ரமேஷ் அரவிந்த், பூர்ணிமா, ராதிகா, சுஹாசினி, நதியா, ரேவதி, பிரியதர்ஷன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ரியூனியன் நிகழ்ச்சியில் தன்னை அழைக்காத வருத்தத்தில் நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “80-களில் நடித்தவர்களில் நான் தேவையில்லாத நபராகிவிட்டேன். ஒரு வேளை நான் மோசமான நடிகராகவோ, இயக்குநராகவோ இருந்திருக்கிறேன். அதனால் தான் இந்த நட்சத்திர சந்திப்புக்கு என்னை அவர்கள் அழைக்கவில்லை. அதனால் நான் வருத்தமுற்றிருக்கிறேன். சிலருக்கு நம்மை பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. ஆனால் வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மூடுபனி என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதாப் போத்தன். இவர் வெற்றிவிழா மற்றும் சீவலப்பேரி பாண்டி என்று இரு படங்கள் இயக்கியிருக்கிறார்.