அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 'மெட் காலா-2019' விழா நடைபெற்றது. இவ்விழாவின் ரெட் கார்ப்பெட்டில் பல பிரபலங்கள் நடந்து வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் வித்தியாசமான உடை அலங்காரத்துடன் வந்தனர்.
பிரியங்கா சோப்ரா இறகுகுகளால் ஆன உடையை அணிந்து வித்தியாசமான தலையலங்காரம் மற்றும் கிரீடத்துடன் வந்தார். அவருடன் கணவர் நிக் ஜோனஸும் வந்திருந்தார். தீபிகா படுகோன் வையலட் நிற பெரிய கவுனுடன் ஹை பஃவ் தலையலங்காரத்துடன் வந்திருந்தார்.
மேலும் வித விதமான சிகை அலங்காரத்துடன், ஆடை அலங்காரத்துடன் பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்குபெற்றனர். இந்த விழா காஸ்டியூம் மியூசியம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக வருடா வருடம் ஒரு தீமுடன் நடைபெறுகிறது. இதில் ஃபேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் பிரபலங்கள் இவ்வாறான ஒப்பனை ஆடைகளை அணிந்துகொண்டு கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அணிந்திருத்த இறகு உடையை தயாரித்த டையர் நிறுவனம் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த உடையை உருவாக்க 1500 மணி நேரம் எடுத்துக்கொண்டது என்றும்.
இதில் அம்பானியின் மகளான இஷா அம்பானியும் கலந்து கொண்டார். ஆனால், பிரியங்கா சோப்ரா இந்த அலங்காரத்தினால் சமூக வலைதள மீம் கிரியேட்டர்களிடம் டாப்பிக்காக மாட்டிக்கொண்டார். யோகிபாபுவின் ஹேர் ஸ்டைலையும் இவரது ஹேர் ஸ்டைலையும் ஒப்பிட்டு மீம்ஸ்கள் வந்தம் வண்ணம் இருந்தன.