







பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ஆம் ஆண்டு திரைப்பயணம், இரண்டு நிகழ்வும் ஒரே நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மணிரத்னம், வசந்த பாலன், கருணாஸ், ஜீ.வி.பிரகாஷ், சீனு ராமசாமி, விஜயகுமார், மாரி செல்வராஜ், மன்சூர் அலிகான், சிங்கம் புலி, நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், மிஷ்கின், நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாலாவை வாழ்த்தினர். மேலும் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர்.