ஐபிஎல் 17வது சீசனின் இரண்டாவது போட்டி டெல்லி கேபிட்டல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மகாராஜா யாதவந்திர சிங் மைதானத்தில் சண்டிகரில் இன்று மாலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல் அணிக்கு வார்னர் மார்ஸ் இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்தது. வார்னர் 29 ரன்களும் மார்ஸ் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த சாய் ஹோப் அதிரடியாக விளையாடி 25 பந்துகளின் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளின் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புய் , ஸ்டப்ஸ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதி கட்டத்தில் அக்சர் படேல் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் திருப்புமுனையாக கடைசி கட்ட வீரர் அபிஷேக் பொரேல் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அக்சர் படேலின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் என 24 ரன்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்திப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். ரபாடா, ஹர்பிரித், ராகுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்பு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் பேர்ஸ்டோ இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்தது. இருப்பினும் அடுத்தடுத்து இருவரும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷாம் கரண் இணை ஓரளவு அதிரடி காட்டி ஆடியது. பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் சாம் காரனுடன் லிவிங்ஸ்டன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷாம் கரண் அரை சதம் கடந்து 63 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஷாந்த் சிங் டக் அவுட் ஆனாலும், லிவிங்ஸ்டன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 38 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார். 19.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
- வெ.அருண்குமார்