நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துவுடனான 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பிறகு ஓய்வு பெற போவதாக அவர் கூறியுள்ளார்.
ராஸ் டெய்லர் கடந்த 2006 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என கிரிக்கெட்டின் மூன்று விதமாக வடிவங்களிலும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல்வீரர் ராஸ் டெய்லர் ஆவர். நியூஸிலாந்துக்காக அதிக சர்வதேச போட்டிகளில் (445) ஆடியவரும், நியூஸிலாந்துக்காக அதிக சர்வதேச ரன்களை குவித்தவரும் (18074) ராஸ் டெய்லர் தான்.
நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் (8,581), நியூசிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ரன்களை குவித்தவர் (7,584), நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சதங்களை அடித்தவர் (21), ஆஸ்திரேலியாவில் ஒரே டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு வீரர் (290) ஆகிய பெருமைகளையும் ராஸ் டெய்லர் தன்னகத்தே வைத்துள்ளார்.