Published on 28/08/2020 | Edited on 28/08/2020

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கெவின் ஓ பிரையன் அடித்த சிக்ஸர் அவர் கார் கண்ணாடியையே உடைத்துள்ளது. அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. ஒரு உள்ளூர் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் கெவின் ஓ பிரையன் 37 பந்துகளில் அதிரடியாக விளையாடி எட்டு சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்துள்ளார். அந்த எட்டு சிக்ஸரில் அவர் அடித்த ஒரு இமாலய சிக்ஸர் மைதானத்தின் கார் நிறுத்தம் செய்யும் இடத்தில் இருந்த அவர் கார் கண்ணாடியை உடைத்துள்ளது.
இச்செய்தியை அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.