Skip to main content

கேன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி...

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

kane

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நாள் போட்டியின் போது, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்தை தடுக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்யும்போது வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. காயத்தின் தீவிரம் பற்றி மருத்துவர்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.