Published on 25/08/2020 | Edited on 25/08/2020

சச்சினின் நூறு சதங்கள் எனும் சாதனை விராட் கோலியால் முறியடிக்கப்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய இர்பான் பதான், " சச்சினின் சாதனை முறியடிக்கப்படும் என்றால் அது ஒரு இந்தியரால் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தற்போதைய கேப்டன் விராட் கோலியிடம் அதற்கான திறமையும், உடற்தகுதியும் இருக்கிறது. இன்னும் அவருக்கு 30 சதங்கள் தான் தேவைப்படுகிறது. அவர் ஓய்வு பெறுவதற்குள் இதை எட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திலேயே விராட் கோலி நிறைய சாதனைகளைச் செய்துள்ளார்" எனக் கூறினார்.
விராட் கோலி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள் என மொத்தம் 70 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.