இந்தியா நியூஸிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டன்னில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் சோபி டிவைன் அதிகபட்சமாக 62 ரன்கள் அடித்தார். இறுதியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து. இதனை தொடர்ந்து 160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. தொடக்க வீரரான ஸ்மிரிதி மந்தானா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் அரை சதம் கடந்து இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். ஆனால் அவரது விக்கெட்டுக்கு பிறகு மளமளவென இந்திய வீராங்கனைகள் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்து. இதனை தொடர்ந்து நியூஸிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணியின் லியா தஹூஹூ உமன் ஆப் தி மேட்ச் விருதினை பெற்றார்.