Skip to main content

நாடும் முக்கியம்.. நாட்டு மக்களும் முக்கியம்! - குரோஷியா தீயணைப்பு வீரர்களின் கடமை உணர்ச்சி

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய அணிகள் களத்தில் இல்லை. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளன. குறிப்பாக, குரோஷியா அணி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 
 

photo

 

 

 

இந்நிலையில், குரோஷியா நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், குரோஷியா அணியின் போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கடமையாற்றச் செல்வதற்கு மின்னல் வேகத்தில் கிளம்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
 

ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகள் காலிறுதிப் போட்டியில் விளையாடின. இதில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் நிகழ்வை குரோஷியா நாட்டின் தீயணைப்பு வீரர்கள் கூட்டமாக அமர்ந்து கண்டுகளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் விபத்து நடந்திருப்பதை உணர்த்தும் சமிக்ஞை வர, அவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் கிளம்பி மீட்புப்பணிக்கு தயாராகின்றனர். குரோஷிய வீரர்களின் இந்த செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. 
 

 

 

ஆனால், இது நிஜமாகவே நடந்த சம்பவமா என்றால் கிடையாது. இதற்கு விளக்கம் தரும்விதமாக குரோஷியாவின் தீயணைப்புத் துறை ட்விட்டர் பக்கத்தில், ‘இது உண்மையிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோதான். உலகக்கோப்பையை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள், நெருப்பு விஷயங்களில் கவனம் சிதறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது’ என விளக்கமளித்துள்ளது.