Skip to main content

இன்றைய ராசி பலன்-21.06.2024

Published on 20/06/2024 | Edited on 21/06/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

21-06-2024, ஆனி 07, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.32 வரை பின்பு பௌர்ணமி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.18 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 06.18 வரை பின்பு அமிர்தயோகம். பௌர்ணமி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
 

இன்றைய ராசி பலன் - 21.06.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 6.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

reshabam

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 6.18 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

3

மிதுனம் 

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

kadagam

கடகம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் குறையும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.
 

5

சிம்மம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
 

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.
 

danush

தனுசு

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.


magaram

மகரம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
 

kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

meenam

மீனம்

இன்று உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.