Skip to main content

இன்றைய ராசிபலன்-07.03.2025

Published on 07/03/2025 | Edited on 08/03/2025
Today rasi palan - 11.02.2025

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-03-2025, மாசி 23, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி காலை 09.19 வரை பின்பு வளர்பிறை நவமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.32 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
 

இன்றைய ராசிபலன் -  07.03.2025

 mesham

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
 

 reshabam

ரிஷபம்


இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.




3

மிதுனம்

இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவர். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.




kadagam

கடகம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.


 5

சிம்மம்

இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.


kannirasi

கன்னி

இன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

 thulam

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் மதியத்திற்கு பிறகு மன அமைதி கிட்டும்.



 viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பகல் 11.45 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.


 danush

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.


magaram

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.


 kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.



 meenam

மீனம்

இன்று நீங்கள் செய்ய நினைத்த செயல்களை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

சார்ந்த செய்திகள்