Published on 15/11/2018 | Edited on 15/11/2018
![modi summit](http://image.nakkheeran.in/cdn/farfuture/urbTnoxqfW0IbBmOonaG85enxfAViKYVX_7FAYCNs30/1542295376/sites/default/files/inline-images/modi%20summit.jpg)
சிங்கப்பூரில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உச்சி மாநாடு நவம்பர் 11 ஆம் தேதி முதல் நவம்பர் 15 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்றது. இதில் மோடி கலந்துகொண்டார், மேலும் பல தென் கிழக்கு நாட்டின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.