அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோர் நாடு முழுவதும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இரு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான முதல் சுற்று நேரடி விவாத நிகழ்ச்சி முடிவடைந்துள்ள சூழலில், இரு கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் வேட்பாளர்களும் நேற்று நேரடி விவாதம் மேற்கொண்டனர்.
இதில் ஆரம்பம் முதல் குடியரசு கட்சியின் செயல்பாடுகளையும், அதிபர் ட்ரம்ப்பின் பல்வேறு திட்டங்களையும் சரமாரியாக விமர்சித்தார் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். அந்தவகையில் கரோனா தொற்றை கையாண்டது, தொழில் போட்டியில் சீனாவிடம் தோல்வியுற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கமலா ஹாரிஸ் ஆளும்கட்சி மீது சுமத்தினார். மேலும், இந்த அரசு மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமையை இழந்து விட்டது என்று சாடினார்.