இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
பூமிக்கு அடியில் 130 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்ததாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.