Skip to main content

கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை - காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 

dr

 

கால்டாக்சி ஓட்டுனர்  ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ராஜேஷ்,  கால் டாக்சி  ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார்.   கடந்த 25-ஆம் தேதி சென்னையில் கோயம்பேடு வரும் வழியில், டிஎல்எப் என்ற இடத்தில், பெண் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக் கொண்டு, மற்றொரு வாடிக்கையாளருக்காக சாலையோரம் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், வண்டியை நிறுத்தக் கூடாது என்று திட்டியுள்ளார். இதனால் சற்று தள்ளி சென்று வண்டியை நிறுத்தி உள்ளார்.  அங்கும் வந்த அந்தப் போலீஸ்காரர், வண்டிக்கு உள்ளே பெண் அமர்ந்திருக்கிறார் என்றும் பார்க்காமல் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மேலும் ஓட்டுனர் ராஜேஷின் அம்மாவையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ், அன்றைய தினம் (25-01-2019) இரவு சென்னையை அடுத்த மறைமலை நகரில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

 

 தற்கொலைக்கு முன்னர் ராஜேஷ், தனது மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பேசிய வீடியோவை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த வீடியோவில், காவல் துறையினர் இப்படி நடந்துகொள்ளலாமா? என்றும்,  ஒரு மனிதனை இந்த அளவுக்கா கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது? என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.

 

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் செய்தியைப்படித்து தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  இதையடுத்து நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்