எந்த நேரமும் அமெரிக்கா அழியக்கூடும்! - வடகொரியா அதிபர் திட்டவட்டம்
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நடைபெற்று வரும் வார்த்தைப் போருக்கு இன்னமும் முடிவு கிடைக்கவில்லை. அமெரிக்காவும், வடகொரியாவும் ஒருவரையொருவர் அழித்துவிடுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கும் சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி, பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா முன்வந்தால் போர்ப்பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக வீடியோவில் தோன்றிய வடகொரியா அதிபர் கிம், தனது புத்தாண்டு வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டார். பின்னர், அமெரிக்கா பற்றிப் பேசும்போது, நாங்கள் இனியும் மிரட்டிக் கொண்டு மட்டுமே இருப்போம் என அமெரிக்கா எண்ணுகிறது. ஆனால், நாங்கள் எங்கள் அணு ஆயுதத் தேவைகளில் தன்னிறைவு அடைந்திருக்கிறோம். அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பொத்தான்கள் என் மேஜையில்தான் இருக்கின்றன. அமெரிக்காவின் முக்கிய நிலங்களை நோக்கி எங்கள் ஏவுகணைகள் இலக்கு வைத்து காத்திருக்கின்றன. எந்த நேரமும் அமெரிக்கா அழிவைச் சந்திக்க நேரிடும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.