ஆடி 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுர் அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
ஆனால், வரும் ஆடி மாதம் 18 ஆம் தேதி பதினெட்டாம் பெருக்கு திருநாள் வருவதால், மேட்டூர் அணியிலிருந்து 2500 கன அடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.