Published on 12/12/2023 | Edited on 12/12/2023
சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையேயான ரயில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திரிசூலம்-மீனம்பாக்கம் இடையேயான பகுதியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தாம்பரம் கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவை பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பயணிகள் தவித்தனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக இறங்கினர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சீரமைப்பு பணிகளுக்கு பின்பு தற்போது தற்காலிகமாக தண்டவாளத்தில் கிளாம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்தில் மெதுவாக இயக்கப்பட்டு ரயில் சேவை தொடரப்பட்டுள்ளது.