Skip to main content

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் ரூபாய் 3.64 கோடி அபராதம் வசூல்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

tamilnadu lockdown rs 3.64 crores police


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே- 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்குப் பல்வேறு மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 3,75,596 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 3.64 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
 

அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், விதிகளை மீறியதாக இதுவரை 3,56,526 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்