Skip to main content

கலைஞரை மறந்து பாஜகவை விமர்சித்தது அநாகரிகம் - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
tamilisai soundararajan twittertt


 

 


சென்னையில் வியாழக்கிழமை மாலை கலைஞருக்கு புகழ் வணக்க கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்று கலைஞருக்கு புகழாரம் சூட்டினர். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று பங்கேற்று பேசினார். இதனால் அரசியல் பேச வாய்ப்பு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி டெரிக் ஓ பிரையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசினார்கள்.
 

 

 

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், 

ஸ்டாலின் தலைவரான பின் தன் ஏற்புரையில் பாஜக எதிர்ப்பை கடுஞ்சொற்களால் பேசிய நிலையிலும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞருக்கு மரியாதை செலுத்த பாஜக மூத்த தலைவர் நிதின்கட்கரி கலந்து கொண்டது அரசியல் நாகரிகம். ஆனால் அதே கூட்டத்தில் மற்றவர்கள் கலைஞரை மறந்து பாஜகவை விமர்சித்தது அநாகரிகம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்