மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெராஸ்கான் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு, வாக்கு சாவடி ஏற்பாடுகள், வாக்குசாவடி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர் பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதா, அதில் ஏதாவது குளறுபடி உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.