Published on 24/10/2019 | Edited on 24/10/2019

நாளை வெளியாகும் பிகில் மற்றும் கைதி திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பினால் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என திருத்தணி வட்டாச்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நாளை விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்திக் நடிப்பில் கைதி ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அரசு அனுமதியை மீறி சிறப்பு காட்சி போடக்கூடாது என திருத்தணி வட்டாட்சியர் திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிகில் படத்திற்கு காலை 7 மணி காட்சி ஒளிபரப்ப டிக்கெட் விற்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.