கோவை மாநகராட்சி சார்பில் புதிய வரி சீராய்வு திட்டம் அமல்
கோவை மாநகராட்சி சார்பில் புதிய வரி சீராய்வு திட்டம் அமல்படுத்தபப்ட்டுள்ளது. இதில் தண்ணீர் வரி, சொத்துவரி, வீட்டு வரி, குப்பை வரி என பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த வரிக்கான எவ்வித பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும் கோவை மாநகராட்சி தன்னிச்சையாக வரிகளை அறிவித்திருப்பதோடு வைப்பு தொகையையும் அதிகரித்து அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் இதனை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி அண்மை காலமாக மாநகராட்சிக்கு எதிராக போராட்டங்கள நடைபெற்று வரும் நிலையில் இன்று கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளிலும் மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்ட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதோடு உடனடியாக புதிய வரி சீராய்வு திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
- அருள்