Skip to main content

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்!

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவிவகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவிவகித்து வந்த வித்யாசாகர் ராவ், கடந்த வருடம் அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பார் என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இன்று காலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றுக் கொண்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமானநிலையத்திற்கு சென்று, வித்யாசாகர் ராவை வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் சென்னை வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்