சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பாலமுருகன். 2013-ஆம் ஆண்டு இளைஞர் காவல் படையில் சேர்ந்த பாலமுருகன் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிவந்தார்.
அதன் பிறகு கடந்த 2016-ல் காவலராக நியமிக்கப்பட்டு சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி மையத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக விடுமுறையில் இருந்த காவலர் பாலமுருகன் நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று பணிக்கு சென்று வீடு திரும்பினார் அப்போது கழிவறைக்குள் சென்ற அவர் வெகுநேரமாக வெளியே வராததால் குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினர் கழிவறை கதவை உடைத்து பார்த்தனர் உள்ளே காவலர் பாலமுருகன் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ந்துபோன பாலமுருகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பாலமுருகனின் தாயார் கூறுகையில் பணிசுமையால்தான் தன் மகன் தற்கொலை செய்துகொண்டான் என்றார். அதேபோல் அக்கம்பக்கத்தினர் கூறுகையில் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவனுக்கு வேறு எந்த பெரிய நெருக்கடியும் இல்லை. பணிசுமையின் காரணமாகவே தற்கொலை செய்துள்ளார். அவருக்கு அந்தவேலையில் ஏற்பட்ட பணிச்சுமை, நெருக்கடிக்கு பிறகு ஈடுபாடு இல்லை ஆனால் அவரது குடும்பத்தின் நிலை அவருடைய தங்கை பற்றி யோசித்ததால்தான் பணிச்சுமை, நெருக்கடியை யாரிடமும் வெளிப்படுத்தாமல் தொடர்ந்து பணிக்கு சென்று வந்தார் அதுவே தற்போது தற்கொலையில் நிறுத்தியிருக்கியது என கூறினர்.