
பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தி.மு.க எம்.பி. கனிமொழி கன்னியாகுமாரிக்கு வந்தார். அவருக்கு தி.மு.க வினா் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றனா்.
அதன்பிறகு அவா் நிருபா்களிடம் பேசிய போது, ‘’மே தினத்தை கலைஞா் ஆட்சியில் தான் தொழிலாளா்களும் உழைப்பாளா்களும் சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதற்கு காரணம் கலைஞா் தொழிலாளா் வா்க்கத்தினரின் கோரிக்கைகளை மறுத்ததே கிடையாது. நியாயமான கோரிக்கைகளை தொழிலாளா்கள் கேட்பதற்கு முன்னே கலைஞா் நிறைவேற்றுவார்.
ஆனால் தற்போது தமிழகத்தில் தொழிலாளா்களையும் விவசாயிகளையும் வஞ்சிக்க கூடிய ஆட்சி தான் நடக்கிறது. அவா்களின் உழைப்புகள் எல்லாம் அரசால் சுரண்டபட்டு வருகிறது. தொழிலாளா்களுக்கும் விவசாயிகளுக்கும் நியாயமும் மரியாதையும் கிடைக்க வேண்டுமென்றால் இந்த அரசை மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டையும் மக்களையும் வஞ்சிக்ககூடிய ஆட்சி மத்தியில் தேவையில்லை. அனைத்து மாநிலங்களையும் மதிக்க கூடிய மக்களுக்கு மரியாதை கொடுக்க கூடிய பிரதமா் தான் தேவை. இது தான் தி.மு.க வின் கோரிக்கை. சந்திரசேகா் ராவை தோ்தல் கூட்டணிக்காக சந்திக்கவில்லை என்று தளபதியே சொல்லி விட்டார்’’ என்று கூறினார்.