Skip to main content

கிளம்பிட்டாங்கப்பா.. கிளம்பிட்டாங்க..!" விதவிதமாய் மூன்று கோஷ்டிகள்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள அக்கட்சி தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 

சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்  பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார்.  ஆனால் இதை காங்கிரஸ் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.

 

ra


இதையொட்டி தான்  இந்தியா முழுவதும் உள்ள காங்கிரசார்   ராகுல் காந்தி தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கையை  வலியுறுத்தி சில இடங்களில் அமைதி ஊர்வலம் நடத்தி வந்தனர்.

 

காங்கிரஸில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கோஷ்டிகள் உள்ளது. ஒவ்வொரு கோஷ்டியும் தங்கள் பணியை வெளிக்காட்ட ஏதாவது செயல்பாடுகள் செய்வதும் வாடிக்கை. இதன்படி ஈரோடு மாநகர் தெற்கு  மாவட்ட காங்கிரஸ் சார்பில் இரு நாட்களுக்கு முன்பு கட்சியின் மாவட்ட தலைவரான மக்கள் ராஜன் இவர் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோஷ்டி. இவர்கள் செயற்குழு கூட்டி தலைவர் ராகுல் காந்தி தான் தலைவர் என தீர்மானம் போட்டதோடு கட்சியில் டெல்லி தலைமைக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள். இ,மெயில்கள் அனுப்பினார்கள். இந்த நிலையில் இன்று முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோஷ்டியான மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் ராகுல் காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். 


அதன்படி ஈரோட்டில் உள்ள  காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இன்று காலை  உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மாலைவரை நூற்றுக்கணக்கான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்து இதன் தகவல் மற்றும் போட்டோக்களை டெல்லிக்கு அனுப்பினார்கள். இதனை தொடர்ந்து நாளை ப.சிதம்பரம் கோஷ்டி காங்கிரசார் மவுன விரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர். 

 

தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும். மீண்டும் மோடி பிரதமர் நாற்காலியில் அமர விடக் கூடாது என தீவிர பிரச்சாரம் செய்தும் காங்கிரஸ் நாடு முழுக்க பலத்த தோல்வியை சந்தித்தது. இதை தாங்க முடியாமல் இதற்கு பொறுப்பேற்று தலைவர் பதவி விலகுவதாக ராகுல் காந்தி முடிவு செய்தார். அதை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தி வரும் நிலையில் வழக்கம் போல் காங்கிரஸ் கோஷ்டி முகங்கள் தனிதனி செயல்பாடுகளாக இதிலேயும் அரசியல் செய்ய  கிளம்பீட்டங்கப்பா.. கிளம்பிட்டாங்க என கிண்டல் பேச்சுக்களும் எதிரொ லிக்கிறது.

சார்ந்த செய்திகள்