Published on 29/08/2018 | Edited on 29/08/2018

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு தேமுதிமுக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின் அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கழக பொருளாளர அவர்களும் தேர்ந்தெடுத்தமைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.