தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் பாராளுமன்ற தேர்தல் 2019 விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் தேர்தல் அறிக்கையை முன்வைத்து விவசாயிகள் சந்திப்பு பரப்புரை பயணம் கடந்த 1-ம் தேதி தேதி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் துவங்கி மார்ச் 8 தஞ்சாவூரில் நிறைவடைகிறது.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/eNOa-IymEM1hkSp-70Y29ttnek0z9tABM1tQucFrlrQ/1551996678/sites/default/files/inline-images/prp1.jpg)
தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகள் சந்திப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு 7- ந்தேதி மாலை சிதம்பரம் நகருக்கு வருகை தந்த பி.ஆர் பாண்டியன் விவசாயிகளை சந்தித்து பேசுகையில், அம்பானியும்,அதானியும் மோடியை கையாளாக வைத்துக் கொண்டு சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுபகுதிகளில் விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து வேலைகளும் செய்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் விவசாய நிலங்களை கைப்பற்றி நான்கு வழி சாலை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்கிறார்கள் எனவே இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சாலைகள் அமைக்கவும், ஹைட்ரோகார்பன் கையகப்படுத்தபட்ட நிலங்களை விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கு துரோகம் செய்த கட்சிகளை தமிழக விவசாயிகள் அடையாளம் காட்டுவார்கள். எங்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் கொண்டுவரப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளது அதனை வரவேற்கிறோம். கொள்ளிடத்தில் கதவணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியத்திற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மோடியிடம் வலியுறுத்தாத எடப்பாடி பழனிச்சாமி கங்கையும், கோதாவரியும் இணைப்பதற்கு மோடியிடம் வலியுறுத்துகிறார். இது சாத்தியமானது தான என்று கூட தெரியாமல் தமிழக மக்களையும் விவசாயிகளையும் எடப்பாடியும், மோடியும் பல வழிகளில் வஞ்சித்து வருகிறார்கள் அவர்களை மக்கள் மத்தியில் அடையாளபடுத்துவோம் என்றார். என்ன கட்சியில் கொள்ளிடம் கீழணை பாசன சங்க தலைவர் விநாயகமூர்த்தி கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்க தலைவர் சையதுசக்காப் செயலாளர் கண்ணன், ராதா வாய்க்கால் பாசன சங்க தலைவர் ரெங்கநாயகி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.