Published on 22/06/2021 | Edited on 22/06/2021

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் ஏடிஎம்களில் பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி தடை விதித்துள்ளது. சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் நூதன முறையில் 10 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் எஸ்பிஐ வங்கி, டெபாசிட் ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிக தடை விதித்துள்ளது.