Skip to main content

கணவரின் நண்பர்களால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
friends


திருவாரூர் அருகே 3 மாத கர்ப்பிணி பெண்ணை அவரது கணவரின் நண்பர்களே கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவர் திருப்பூரில் வேலை செய்தபோது தன்னுடன் வேலை பார்த்த 20 வயது நிரம்பிய பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அழைத்து வந்த அவர், அங்கு வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இளவரசன் ஊரிலேயே தங்கி வேலை செய்து வருகிறார். தற்போது இளவரசனின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
 

 

 

இந்தநிலையில் இளவரசன் திருப்பூரில் வேலை பார்த்த போது அவருடன் ஒன்றாக வேலை செய்து வந்த அவரது நண்பர்கள் ஜாம்புவானோடையை சேர்ந்த நித்தையன், பேட்டை பகுதியை சேர்ந்த பூவரசன் ஆகிய இருவரும் பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்தனர். ஊருக்கு வந்த இடத்தில் இளவரசன் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேட்டை கோவில் திருவிழாவிற்கு வருமாறு அழைத்தனர்.

நண்பர்களின் அழைப்பை ஏற்று இளவரசன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் புறப்பட்டு சென்றார். அங்கு சென்றதும் நித்தையனும், பூவரசனும் கோவில் திருவிழாவுக்கு காவடி கட்டும் வேலையை இளவரசனிடம் செய்யுமாறு கூறினர். இதனையடுத்து காவடி கட்டும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது நித்தையனும், பூவரசனும் அங்கிருந்து புறப்பட்டு இளவரசனின் வீட்டிற்கு வந்தனர். அங்கு வீட்டுக்குள் நுழைந்த இருவரும் வீட்டின் கதவை பூட்டினர். கதவு பூட்டும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்து இருந்த இளவரசனின் மனைவி திடுக்கிட்டு கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் தனது கணவரின் நண்பர்கள் இருவரும் நின்று கொண்டு இருப்பது தெரிய வந்ததும் நிலைமையை அறிந்து அவர் சத்தம் போட்டுள்ளார்.

உடனே இருவரும் பாய்ந்து சென்று அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்துள்ளனர். பின்னர் இருவரும் அந்த பெண்ணை மாறி, மாறி கற்பழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிவு செய்த அந்த பெண் தனது வாயில் திணித்து இருந்த துணியை அவிழ்த்து சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
 

 

 

இதையடுத்து, சம்பவம் குறித்து அந்த பெண் முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தையன், பூவரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் இருவரும் அந்த பெண்ணை கற்பழித்தது உண்மை என்று சான்று வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்