Skip to main content

ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு.. முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Petition filed by wife of teacher Rajagopalan .. High Court refuses to hear in advance

 

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர், அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்து புகைப்படம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்தப் புகாரின் அடிப்படையில், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து, சிறையிலடைத்தனர். இதனையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து ராஜகோபால் மீது புகார்கள் குவிந்த நிலையில், ராஜகோபாலன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி, உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், எனவே கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எனவே வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். 

 

இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் அமர்வு முன்பு இன்று (08.09.2021) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்