Skip to main content

விடுமுறை காலங்களில் நூலகத்திற்கு செல்ல மாணவர்களை பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்திலுள்ள சின்ன காஜியார் தெருவில் தமிழக அரசின் சார்பில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முழுநேர நூலகமாக செயல்படும் இந்த நூலகத்திற்கு நிரந்தர உறுப்பினர்களாக 16,500 பேர் உள்ளனர். ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து துறைகளை சார்ந்த நூல்கள் உள்ளது. தினமும் 300 பேருக்கு மேல் நூல்களை இரவல் வாங்கி செல்கிறார்கள்.

 

library

 

 இந்த நூலகத்திற்கு ஒரு நாளைக்கு 600-க்கும் மேற்பட்ட வாசகர்கள் காலை முதல் மாலை வரை வந்து செல்கிறார்கள். நூலகத்திற்கு வரும் வாசகர்களை நூலகர்கள் குடிமை பணிக்கு படிக்க வருபவர்கள், அன்றாட செய்தி இதழ்கள் படிக்க வருபவர்கள், சிறுவர்கள் பகுதி, பெண்கள் பகுதி என வகைப்படுத்தி அமர வைக்கிறார்கள். இதனால் வாசகர்கள அமைதியான முறையில் அவர்களுக்கு தேவையான விஷயங்களை தேடி படித்து செல்கிறார்கள். இது அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

இந்நிலையில் அரசின் குடிமை பணிக்கு படிக்கும் 70-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அமைதியான முறையில் படித்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து நூலகர் முத்துகுமார், ஊழியர்கள் ரகுநந்தன், அருள், கணேசன் உள்ளிட்டவர்கள் கூறுகையில் இங்கு வரும் வாசகர்கள் அனைவரும் அமைதியான முறையில் படித்து செல்லவும், அவர்களுக்கு தேவையான அனைத்து நூல்களையும் தேடி தருகிறோம்.
 

விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். படிப்பை முடித்து மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு தேவையான நூல்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தினசரிகள், வாரஇதழ்கள் உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு நல்லமுறையில் அரசு பணிக்கு செல்லவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் நூலகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள்.   

 

 


 

சார்ந்த செய்திகள்