Skip to main content

காக்கிகளுடன் எதிர் கட்சிகள் மோதல்! அதிமுக டெபாசிட் வாங்க முடியாது! கைதான ஐ.பி. பகீர் பேட்டி!!!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
ip


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். அதுபோல் திண்டுக்கல்லில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஐ.பி.யுடன் 3000க்கு மேற்பட்டோர் நகரில் பேரணியாக சென்று மத்திய மாநில அரசை கண்டித்து மேலாண்மை அமைக்க வலியுறுத்தினார்கள்.

ஏற்கனவே வியாபாரிகள் பெரும்பாலானோர் பந்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்திருந்தனர். அதோடு எதிர்கட்சிகளும் குரல் கொடுத்து வந்ததை கண்டு திடீரென காக்கிகள் பேரணியை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் டென்ஷன் அடைந்து போராட்டத்தில் குதித்து வந்த கட்சிகார்கள் ரோட்டின் நடுவே போடப்பட்டிருந்த பேரி கேட்டுகளை தள்ளிவிட்டனர்.

ip


இதனால் கட்சிகாரர்கள் - காக்கிளுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்படி இருந்தும் போராட்டத்தில் குதித்த எதிர்கட்சியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காக்கிகளின் தடுப்புகளையும் உடைத்து விட்டு நகர் முழுவதும் பேரணியை நடத்தி கொண்டு வந்தவர்கள் வாணிவிலாஸ் அருகே வரும் போது திடீரென பேருந்து மறியலில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.பி. உள்பட 3000க்கு மேற்பட்ட எதிர்கட்சி கார்களை போலீசார் கைது செய்தது. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது....
 

ip


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி அரசு நடத்திய போராட்டத்தில் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை கண்டித்து பேசவில்லை. மக்களுக்கு விரோத அரசாக தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இப்படிப் பட்ட ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் மத்திய அரசுக்கு எடுபிடி அரசாக இந்த எடப்பாடி அரசு காலில் விழுந்து வருகிறது. ஆனால் மக்களும் வணிகர்களும் எதிர்கட்சிகள் பின்னால் நிற்கிறார்கள்.

அதனால் தான் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது இந்த அரசை தூக்கி எறிந்து விடும். வருகிற தேர்தலில் அதிமுக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அந்த அளவுக்கு இப்பவே மக்கள் தயாராகி விட்டார்கள். அதோடு இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான எதிர்கட்சிகளின் போராட்டமும் தீவிரம் அடையும். அதற்கு இப்பொழுது போல் தொடர்ந்து வியாபாரிகளும் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்