தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வருகை!
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்துவிட்டனர்.
நேற்று அதிமுக-வில் பிளவுபட்டுக் கிடந்த இரு அணிகளும் இணைந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்திக்க இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது நிலவுவரும் அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் முறையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள்: செண்பக பாண்டியன்