தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தும் நீட் நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் நடத்துகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 18,72,341 மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5.20 வரை நடைபெறுகிறது. இந்த நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
தமிழகம் பொறுத்தவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளத் தனியார் பள்ளியிலும், மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியிலும் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் தங்கள் உடைமைகளை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, தேர்வு வளாகத்திற்குள் சென்றனர்.