Skip to main content

திருச்சியை நோக்கி படையெடுக்கும் நாமக்கல், கரூர் மக்கள்!!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

Namakkal and Karurai invading Trichy

 

ஊரடங்கு காரணமாக சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு மதுபான கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மது அருந்துவோர்கள் திருச்சி மாவட்ட அரசு மதுபான கடைகளுக்கு வருவது தற்போது அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், நேற்று (21.06.2021) நாமக்கல், கரூர் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு, ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை செய்துவருகின்றனர். இதில் நேற்று திருச்சி மாவட்டத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட 524 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ததோடு மதுபாட்டிலைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்