Skip to main content

“திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Murasolimaaran the treasure of knowledge of the Dravidian movement CM MKStalin's praise
கோப்புப்படம்

 

திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20வது ஆண்டு நினைவு தினம் திமுக சார்பில் இன்று (23.11.2023) அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் முரசொலி மாறன் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவில், “மூத்த பிள்ளையாம் முரசொலியைப் பொறுப்பேற்று நடத்திய கலைஞரின் மனசாட்சி. திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம். தலைநகரில் கழகத்தின் முகம். நாடாளுமன்றத்தில் மாநில உரிமையின் குரல். உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக வாதாடிய மதியூகி. இப்படி எத்தனை சொன்னாலும் தகும் தகுதிக்குரிய மதிப்புக்குரிய முரசொலி மாறன் நினைவு நாளில் அவருக்கு என் புகழ் வணக்கம்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்